அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் இன்று (பிப்ரவரி 17) அதிமுகவில் இணைந்தார்.
லீமா ரோஸ் இந்திய ஜனநாயக கட்சியில் இணைப் பொதுச்செயலாளராக இருந்து வந்தார். கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி ஐஜேகே கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில், கட்சிக்காக கால நேரம் பார்க்காமல் உழைத்த நிலையில் தனது உழைப்பை கட்சி அங்கீகரிக்கவில்லை என்றும், தனது உழைப்பை உதாசீனப்படுத்தியதாகவும், இதனால் கட்சியிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று லீமா ரோஸ் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.
தமிழகத்தில் திமுக– தவெக இடையில் மட்டும்தான் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டி என்று தொடர்ச்சியாகப் பேசி வரும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் தேர்தல் மேலாண்மைப் பொதுச் செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா லீமா ரோஸின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
