ஹெல்த் டிப்ஸ்: மகிழ்ச்சியான மனநிலைக்கு… இந்த உணவுகள் வேண்டாமே!

Published On:

| By christopher

List of Food for a happy mood

மகிழ்ச்சியான மனநிலைக்குக் குறிப்பிட்ட உணவு ரகங்களை தவிர்ப்பதன் மூலமாகவும் அடையலாம் என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள். List of Food for a happy mood

நாம் உண்ணும் உணவுகள் மூளையின் செயல்பாட்டைத் தூண்டி ஒட்டுமொத்த உடலை மட்டுமல்ல… மனதையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த நிலையில் மூளையின் செயல்பாடு, ஹார்மோன் அளவுகள் மற்றும் ஊட்டச்சத்து சமநிலை ஆகியவற்றில் ஏற்படும் தாக்கம் காரணமாக, சில உணவுகள் மன ஆரோக்கியத்தையும் ஒட்டுமொத்த மனநிலையையும் பாதிக்கக் கூடும்.

எனவே மகிழ்வான மனநிலையை உணர நாம் தவிர்த்தாக வேண்டிய சில உணவு ரகங்களையும் பரிந்துரைக்கிறார்கள். இவற்றை முழுமையாக தவிர்க்க இயலாது என்பவர்கள், அவற்றின் அளவையேனும் குறைக்க முயற்சி செய்யலாம் என்று அறிவுறுத்துகிறார்கள்..

உதாரணத்துக்கு… “பதப்படுத்தப்பட்ட உணவுகளை பதப்படுத்துவதற்கான வேதி சேர்மானங்கள், மூளையின் செயல்பாட்டை எதிர்மறையாக பாதிக்கக் கூடியவை. இவற்றுக்கு மாறாக ஃப்ரெஷ்ஷான பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள் உள்ளிட்ட பதப்படுத்தப்படாத உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்.

சர்க்கரை அதிகம் சேர்ந்த உணவுகள், பானங்களை உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இதனால் மனநிலை மாற்றங்கள், அடையாளம் அறிய இயலாத எரிச்சல் மற்றும் சோர்வு ஏற்படும். மூளை ரசாயனங்களின் சமநிலையையும் இது சீர்குலைக்கும்.

வெளியிடங்களில் தயாராகும் உணவுகளில் சுவையூட்டியாக அதிகம் சேர்க்கப்படும் செயற்கை இனிப்புகளும் பாதிப்பை உண்டு பண்ணும். மாறாக தேன் போன்ற இயற்கை இனிப்புகளை மிதமாக எடுக்கலாம்; அல்லது சுவையான பழங்களை ருசிக்கலாம்.

வறுத்த உணவுகளில் காணப்படும் டிரான்ஸ் கொழுப்புகள் மூளை ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் உற்பத்தியில் தலையிடலாம். மாறாக, ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் போன்ற ஆரோக்கிய கொழுப்புகளை நாடலாம்.

அதிகப்படி உப்பு உடலின் நீரிழப்பு முதல் ரத்த அழுத்தம் வரை பாதிப்புகளுக்கு வித்திடும். உப்பு அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பதும், அதனை அளவாக சேர்ப்பதும் மனநிலையை மகிழ்வாக வைத்திருக்கும். List of Food for a happy mood

வறுத்த உணவுகளில் நிறைந்திருக்கும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், மனநலனை நேரடியாக பாதிக்கும். அதிலும் சுட்ட எண்ணெயை பயன்படுத்தும் வெளி உணவுகள், இதர உடல்நல பாதிப்புகளுக்கும் இடமளிக்கும்” என்று பட்டியலிடுகிறார்கள். List of Food for a happy mood

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share