கேரளா மாநில பக்தர்களுக்கு வசதி செய்து கொடுப்பதற்காக தமிழ்நாடு அரசுபழனியில் நிலம் வழங்க இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் சபரிமலையில் தமிழ்நாட்டின் பக்தர்களுக்கு வசதிகளை செய்து தருவதற்காக, 5 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: கேரளா மாநிலம் சபரிமலை நிலக்கல்லில் தமிழக பக்தர்களின் வசதிக்காக 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தர வேண்டும் என கேரளா அரசிடம் கேட்டிருந்தோம்.
அதற்கு, பழனியில் கேரளா பக்தர்களுக்கு வசதி செய்தி தருவதற்கு தமிழக அரசு நிலம் ஒதுக்கி கொடுத்தால் நாங்களும் நிலம் தருகிறோம் என்றனர். இது தொடர்பான வழக்கும் நிலுவையில் இருப்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணகி கோவில் வழிப்பாதை, வழக்குகளை சீர்படுத்தி கண்ணகி கோவிலை கட்டுவது தொடர்பாகவும் கேரளா அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.