குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா இன்று (செப்டம்பர் 23) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா மிக முக்கியமான நிகழ்வாகும்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த திருவிழாவின் இறுதியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி அக்டோபர் 2-ந் தேதி நடைபெறும்.
முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.