சிலிண்டர் கேஸ் வீணாகாமல் மிச்சப்படுத்தணுமா?.. சூப்பர் டிப்ஸ் இதோ..

Published On:

| By Santhosh Raj Saravanan

kitchen tips to reduce your LPG gas use in cooking

சிலிண்டர் (LPG) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், சமையலில் சின்ன சின்ன விஷயங்களை செய்து கேஸை மிச்சப்படுத்துவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள எல்.பி.ஜி. சிலிண்டர் தட்டுப்பாடு மக்களிடையே அதிக கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வணிக சிலிண்டர்கள் நிறுத்தப்பட்டு உள்ளதால் பல  ஹோட்டல்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இது அடுத்து வீட்டு உபயோக சிலிண்டருக்குதான் வரும் என மக்கள் அச்சத்தில் தற்போதே சிலிண்டர் புக் செய்து வைத்துவிட்டனர்.

ADVERTISEMENT

அதே நேரத்தில் சில வழிமுறைகளைக் கையாண்டால் உங்களின் கேஸ் (Commercial cylinder shortage) பயன்பாட்டை 50 சதவீதம் வரை குறைக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக சமையல் செய்யும்போது முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது குறித்தும் பகிர்கிறார்கள்.

பிரஷர் குக்கரை பயன்படுத்த வேண்டும்:

பிரஷர் குக்கரில் சமைப்பது (Cooking pressure cooker) சமையல் நேரத்தை 30 – 70 சதவீதம் குறைக்கிறது. பருப்பு, பீன்ஸ், உருளைக் கிழங்கு, இறைச்சி ஆகியவற்றை குக்கர் பயன்படுத்தி வேகவைக்கலாம். இதன்மூலம் கேஸ் பயன்பாடும் குறைகிறது.

ADVERTISEMENT

ஊறவைத்து சமைக்க வேண்டும்:

அரிசி, பருப்பு வகைகளை ஊறவைத்து சமைப்பது (Soak rice) சமையல் நேரத்தைக் குறைக்கிறது. அரிசியை 20 – 30 நிமிடங்கள், பருப்பை 30 – 60 நிமிடங்கள், கொண்டைக் கடலையை 8 – 10 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இதன்மூலம் உணவு 30 – 50 சதவீதம் வேகமாக சமைக்கப்படும் என்பதால் கேஸ் சிலிண்டர் பயன்பாடும் குறைகிறது.

பர்னர்களை சரியாக பயன்படுத்த வேண்டும்:

தாளிக்க, தேநீர் வைக்க, உணவுகளை மீண்டும் சூடுபடுத்த சிறிய பர்னர்களை (burners) பயன்படுத்தவும். குக்கர் வைக்க, தண்ணீர் கொதிக்க வைக்க பெரிய பர்னர்களை பயன்படுத்தவும். சிறிய பாத்திரங்களுக்குக் கூட பெரிய பர்னர்களை பயன்படுத்துவது கேஸை வீணாக்கும். ஆகவே, எல்லா சமையலுக்கு பெரிய பர்னரை பயன்படுத்த வேண்டாம்.

ADVERTISEMENT

பாத்திரத்தை மூடிவிடவும்:

பாத்திரத்தை மூடி வைத்து சமைப்பது ஆவியாதலை குறைத்து சமைக்கும் (Lids on while cooking) வேகத்தை அதிகப்படுத்துகிறது. இதன்மூலம் கேஸ் பயன்பாடு 20 – 25 சதவீதம் வரை குறைகிறது.

காய்கறிகளை சிறிய துண்டுகளாக வெட்டவும்:

காய்கறிகளை சிறிய சிறிய துண்டுகளாக (Cut vegetables smaller) வெட்டும்போது விரைவில் வேகின்றன. உதாரணமாக பெரிய உருளைக் கிழங்குகளை விட சிறிய துண்டு உருளைக் கிழங்குகள் வேகமாக வேகும். இதன்மூலம் கேஸ் மிச்சப்படுத்தப்படுகிறது.

பர்னர்களை சுத்தம் செய்ய வேண்டும்:

அடைபட்ட பர்னர் துளைகளால் எரியும் திறன் குறைந்து கேஸ் வீணாகிறது. விரைவாக அடுப்பு சூடாக, குறைந்த கேஸ் (lpg gas use) பயன்பாட்டை உறுதி செய்ய, சில வாரங்களுக்கு ஒருமுறை பர்னர்களை சுத்தம் செய்வது அவசியமாகும்.

சில சமையல் தந்திரங்களை பயன்படுத்தவும்:

தேநீர் தயாரிக்க, பாஸ்தா செய்ய, காய்கறிகளை வேக வைப்பதற்கு தண்ணீர் கொதிக்க வைக்க மின்சார கெட்டில்களை (electric kettle) பயனபடுத்தலாம். 2 – 3 வேளைகளுக்கு தேவையான சாதம், பருப்பு, பீன்ஸ், உருளைக் கிழங்குகளை மொத்தமாக வேகவைத்துவிடலாம். ஒரு வேளைக்கு போனது போக மீதமுள்ளவற்றை குளிர்சாதன பெட்டியில் வைத்துவிடலாம். இதனால் எரிபொருள் மிச்சமாகிறது.

கனமாக அடிப்பகுதி கொண்ட பாத்திரங்கள்:

கனமான அடிப்பகுதி கொண்ட பாத்திரங்கள் சீராக வெப்பத்தை பரப்பி சமையல் நேரத்தை குறைக்கின்றன. தடிமனான அடிப்பகுதி கொண்ட துருப்பிடிக்காத  எஃகு, வார்ப்பு இரும்பு ஆகியவை உள்ள பாத்திரங்களை சமையலுக்கு (cooking tips) பயன்படுத்தலாம். மெல்லிய பாத்திரங்கள் கேஸை அதிகமாக செலவிட வைக்கும்.

முன்கூட்டியே அடுப்பை அணைத்துவிடலாம்:

வெப்பம் தொடர்ந்து இருக்கும் என்பதால் பல உணவுகள் அடுப்பை அணைத்தாலும் தொடர்ந்து வேகும். எனவே, அத்தகைய சமயங்களில், அடுப்பை அணைப்பதன் மூலம் கேஸை (Switch off  gas) சேமிக்கலாம்.  2-3 நிமிடங்களுக்கு முன்னதாகவே அடுப்பை அணைப்பது எரிபொருளைச் சேமிக்க உதவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share