ADVERTISEMENT

காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ் குமாருக்கு 3 மாதம் சிறை!

Published On:

| By Selvam

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான ராஜேஷ் குமாருக்கு 3 மாதம் சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 21) தீர்ப்பளித்துள்ளது. Killiyur congress MLA sentenced

கடந்த 2014-ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு நிலத்தை, அரசு அதிகாரிகள் மீட்க சென்றபோது ஏற்பட்ட தகராறில் அரசு அதிகாரிகளை தாக்கியதாக ராஜேஷ் குமார் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த வழக்கானது, நாகர்கோவில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் தொடர்புடைய மூன்று பேர் உயிரிழந்து விட்டனர்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஹசன் முகமது, “ராஜேஷ் குமார் உள்பட மூன்று பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபணமானது. இதனால் ராஜேஷ் குமார் உள்ளிட்ட மூன்று பேருக்கும் தலா 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.100 அபராதமும் விதிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார். Killiyur congress MLA sentenced

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share