சிறுநீரக பிரச்சனை: புறக்கணிக்கவே கூடாத ஆரம்பகட்ட அறிகுறிகள்..!

Published On:

| By Santhosh Raj Saravanan

Kidney problems 5 Early symptoms never be ignored

சிறுநீரக பிரச்சனை உள்ளதைக் குறிக்கும் புறக்கணிக்கவே கூடாத 5 ஆரம்பகால அறிகுறிகளை பார்ப்போம்.

மனித உடலில் இதயத்திற்கு அடுத்தபடியாக மிக முக்கியமான உறுப்பாக சிறுநீரகம் உள்ளது. ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வடிகட்டி கழிவுகளை நீக்கும் பணிகளை சிறுநீரகங்கள் மேற்கொள்கின்றன. அதேபோல திரவங்கள், அத்தியாவசிய தாதுக்களின் சமநிலையையும் பராமரிக்கின்றன.

ADVERTISEMENT

ஆனால் மாறிவரும் வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், சர்க்கரை நோய் மற்றும் நாள்பட்ட ரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரக நோய்கள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். சிறுநீரக நோயின் ஆரம்பகால அறிகுறிகள் பெரும்பாலும் லேசானவையாக உள்ளன. இதனால் பலரும் அவற்றை கவனிக்காமல் தவறவிடுவதால், சிறுநீரக நோய் மோசமடைகிறது.

சிறுநீரக பிரச்சனை அறிகுறிகள் (Kidney problems symptoms): சிறுநீரக நோய் முற்றும் வரை பல நோயாளிகள் அதுகுறித்து அறிந்திருக்க மாட்டார்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே தொடக்க கால எச்சரிக்கைகளை அடையாளம் கண்டு சரியான நேரத்தில் சிகிச்சை பெறுகிறார்கள். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் பிரச்சனையை தீர்த்துவிடலாம் என்பதால் சிறிய அறிகுறிகளைக் கூட புறக்கணிக்கக் கூடாது.  சிறுநீரகப் பிரச்சனையில் தவிர்க்கக் கூடாத 4 ஆரம்பகால அறிகுறிகளைப் பார்க்கலாம்.

ADVERTISEMENT

தொடர்ச்சியான சோர்வு (Constant fatigue): சிறுநீரக பிரச்சனையின் ஆரம்பகால மற்றும் அடிக்கடி ஏற்படும் அறிகுறிகளில் ஒன்று தொடர்ச்சியான சோர்வு. போதுமான அளவு ஓய்வு எடுத்தாலும் கூட பலவீனமாக உணருதல், ஆற்றல் இல்லாதது ஆகியவை சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்பதன் அறிகுறியாக இருக்கலாம். ரத்தத்தில் கழிவுகள் சேரும்போது ஆற்றல் குறைகிறது. ஆனால், இதனை மன அழுத்தம் காரணமாக நேர்கிறது என பலரும் நிராகரித்துவிடுகிறார்கள்.

தூக்கத்தில் பிரச்சனை (Trouble sleeping): தூக்கத்தில் ஏற்படும் இடையூறும் சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுவது அல்லது தூக்கத்தில் இருந்து பாதியில் விழித்துவிடுவது சிறுநீரக செயல்பாடு பலவீனம் அடைவதைக் குறைக்கலாம்.

ADVERTISEMENT

சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் மாற்றம் (Change in urination): சிறுநீர் கருமையான நிறத்தில் செல்லுதல், சிறுநீரில் ரத்தம் கலந்து செல்லுதல், நுரையுடன் சிறுநீர் வருவல் போன்றவை புரதம் வெளியேறுவதைக் குறிக்கிறது. 

தோல் பிரச்சனைகள் (Skin problems): தோல் தொடர்பான பிரச்சனைகளும் சிறுநீரக பிரச்சனைகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். சிறுநீரகங்கள் தாது சமநிலையை பராமரிக்க போராடும்போது வறண்ட சருமம், தோலில் கடுமையான அரிப்பு, தடுப்புகள் ஏற்படலாம். கண்களை சுற்றி ஏற்படும் வீக்கம், குறிப்பாக காலையில் ஏற்படுவது சிறுநீர் வழியாக புரதம் இழக்கப்படுவதைக் குறிக்கிறது.

கால்கள், கணுக்கால்களில் வீக்கம் (Swelling in the feet and ankles): கால்கள், கணுக்கால்கள் பாதங்களில் வீக்கம் ஏற்படுவது, பசியில்லாமல் இருப்பது, தசைப்பிடிப்பு ஆகியவற்றை புறக்கணிக்கக் கூடாது. அவை சிறுநீரக செயலிழப்பை குறிக்க வாய்ப்புள்ளது.

இந்த அறிகுறிகள் உள்ள அனைவரும் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்துகொள்வது மிகவும் நல்லது. தொடக்கத்திலேயே கண்டறிவது சிறுநீரக பிரச்சனை அதிகரிப்பதை மெதுவாக்குகிறது அல்லது தடுக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share