நான் சந்தித்தவர்களில் மிகவும் கண்ணியமானவர் திரிஷா என்று நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு கூறியுள்ளார்.
நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் மற்றும் நடிகை திரிஷாவை பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்தநிலையில் திருமணம் ஒன்றிற்கு இருவரும் ஒரே காரில் ஒரே உடையில் வந்தது இந்த விமர்சனங்களை வலுப்படுத்தியது.
இதுதொடர்பாக மார்ச் 13ஆம் தேதி சென்னை விமான நிலையத்துக்கு வந்த திரிஷாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் திரிஷா பதிலளிக்க மறுத்துவிட்டார்.
இந்தநிலையில், திரிஷா மிகவும் கண்ணியமானவர் என்று குஷ்பு கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆங்கில ஊடகமான டீகோடர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “துரதிர்ஷ்டவசமாக நாம் தும்மினால் கூட அதை யாராவது ஒருவர் மீது பழியாகப் போடும் காலத்தில் இருக்கிறோம். திரிஷா எனக்கு மிகவும் நெருக்கமானவர். நான் பார்த்த பெண்களிலேயே திரிஷா மிகவும் கண்ணியமானவர் மற்றும் மென்மையான குணம் கொண்டவர்.
யாரோ ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதிலோ அல்லது கருத்துச் சொல்வதிலோ மனநிறைவு கொள்பவர்கள், தங்கள் சொந்தப் பிரச்சினைகளைப் பார்ப்பதில்லை. மற்றவர்கள் மீது கருத்துச் சொல்லி அவர்கள் ஒருவிதமான இன்பத்தைப் பெறுகிறார்கள்.
இப்படி கருத்துச் சொல்பவர்களில் 99.9சதவிமிதம் பேர் நமக்குத் தெரியாதவர்கள். மற்றவர்கள் என்ன கருத்துச் சொல்கிறார்கள் என்பதற்கு நாம் பொறுப்பல்ல. அவர்களுக்குப் பதில் சொல்லி நமது நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை தனது தம்பியைப் போலக் கருதுவதாகக் கூறிய குஷ்பு, பவன் கல்யாணின் அரசியல் பாதையை விஜய் பின்பற்றினால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
