பாஜகவில் குஷ்புவுக்கு புதிய பொறுப்பு!

Published On:

| By Kavi

பாஜக மாநில துணை தலைவராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு 2020 அக்டோபர் 12ஆம் தேதி டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டா தலைமையில் பாஜகவில் இணைந்தார்.

தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வகித்து வந்த குஷ்பு, அந்த பொறுப்பில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட போவதாக கடந்த ஆண்டு அறிவித்தார்.

இந்தநிலையில் இன்று (ஜூலை 30) குஷ்புவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அவரை மாநில துணை தலைவராக (தென் சென்னை) நியமித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். தேசிய தலைவர் நட்டாவின் ஒப்புதலின் படி இந்த பொறுப்பு , வழங்கப்படுவதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

புதிய மாநில துணை தலைவர்கள்

ADVERTISEMENT

சக்கரவர்த்தி, மத்திய சென்னை கிழக்கு, வி.பி.துரைசாமி தென் சென்னை, கே.பி.ராமலிங்கம் நாமக்கல் கிழக்கு, கரு.நாகராஜன் சென்னை கிழக்கு, சசிகலா புஷ்பா தூத்துக்குடி தெற்கு, கனகசபாபதி கோயம்புத்தூர் வடக்கு, டால்பின். ஸ்ரீதர் தென் சென்னை, ஏ.ஜி.சம்பத் விழுப்புரம் தெற்கு, பால் கனகராஜ் மத்திய சென்னை மேற்கு, ஜெயபிரகாஷ் தென் சென்னை, மா.வெங்கடேசன் மத்திய சென்னை கிழக்கு, கோபால்சாமி விருதுநகர் கிழக்கு, சுந்தர் திருநெல்வேலி தெற்கு.

பாஜக மாநில அமைப்புச் செயலாளராக கேசவ விநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மாநில பொருளாளராக எஸ்.ஆர்.சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share