கூட்டணி குறித்து பேச தமிழக காங்கிரஸ் ’தலை’களுக்கு கார்கே, ராகுல் தடை! ட்வீட்டுகளுக்கு ‘குட்டு’!

Published On:

| By Mathi

Delhi TN Congress

தமிழகத்தில் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சியினர் பொதுவெளியில் பேசுவதற்கும் சமூக வலைதளங்களில் பதிவிடவும் அக்கட்சி மேலிடம் தடை விதித்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இன்று ஜனவரி 17-ந் தேதி ஆலோசனை நடத்தினர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் சுமார் 3 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியதாவது: மல்லிகார்ஜூன கார்கேவும் ராகுல் காந்தியும் எங்கள் எல்லோரையும் அழைத்து கருத்துகளைக் கேட்டுள்ளனர்.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், காரிய கமிட்டி உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற கட்சித் தலைவர்கள் தங்களுடைய கருத்துகளை சொல்லி இருக்கின்றனர்.

ADVERTISEMENT

பொதுவெளியில் கூட்டணி குறித்து பேச வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறார்கள். ட்வீட் போடுவது, அறிக்கை கொடுப்பது பற்றி எல்லாம் மிகவும் வேதனையுடன் தெரிவித்தார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்ன முடிவு எடுக்கிறோ அந்த முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பின்பற்றுவோம். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறினார்.

ADVERTISEMENT

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. ஆனால், ஆட்சியில் பங்கு; அதிக தொகுதிகள் என திமுகவிடம் காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இதனை திமுக தலைமை ஏற்க மறுத்துவிட்ட நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share