ஈரான் கமெனி படுகொலை.. ஜம்மு காஷ்மீரில் கொந்தளிப்பு.. உ.பி.யில் போராட்டம்

Published On:

| By Mathi

Khameni Jammu Kashmir

ஈரானின் அதி உயர் தலைவரான கமெனி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் வெடித்துள்ளன. உத்தரப்பிரதேச மாநிலத்திலும் இன்று போராட்டங்கள் நடைபெறுகின்றன.

இஸ்ரேல்- அமெரிக்கா கூட்டு தாக்குதலில் ஈரானின் அதி உயர் தலைவரான கமெனி கொல்லப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் ஷியா பிரிவு முஸ்லிம்களை இப்படுகொலை கொந்தளிக்க வைத்துள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஷியா பிரிவு முஸ்லிம்கள், கமெனி படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து ஊர்வலங்கள் நடத்தினர் .ஸ்ரீநகர் லால் சவுக்கில் பெருந்திரளாக ஒன்று திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

கமெனியின் மூதாதையர்கள் பிறந்த இடமாக கருதப்படும் உ.பி. மாநிலத்திலும் ஷியா பிரிவு முஸ்லிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்று இரவு 8 மணிக்கு மெழுகுவர்த்தி ஏந்தி இரங்கல் தெரிவிப்போம் என அறிவித்துள்ளனர்..

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share