பாஜகவின் அமைப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கேசவ விநாயகத்துக்கு, அக்கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தென்பாரத செய்தித் தொடர்பாளர் ஸ்ரீராம் வெளியிட்ட அறிக்கை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழு நேர ஊழியர்கள் நிர்வாக காரணங்களுக்காக பல்வேறு பொறுப்புகளுக்கு மாற்றப்படுவது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக பொறுப்பு எடுத்து வேலை செய்த கேசவ விநாயகம், இனிமேல் தமிழ்நாடு முழுவதும் சம்பர்க் (சமுதாய நல்லெண்ணம்) என்ற பொறுப்பில் செயல்படுவார். அத்துடன் வட தமிழ்நாட்டின் ஆர்.எஸ்.எஸ். மாநில செயற்குழு உறுப்பினராக செயல்படுவார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
