பாஜகவில் பதவி பறிப்பு- கேசவ விநாயகம் ரியாக்சன் என்ன?

Published On:

| By Mathi

RSS BJP Kesava Vinayagam

தமிழக பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கேசவ விநாயகம் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று பிப்ரவரி 10-ந் தேதி வெளியாகிறது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணியாற்றிய கேசவ விநாயகம், கடந்த 2015-ம் ஆண்டு தமிழக பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழக பாஜகவில் அதிகார மையமாகவும் கேசவ விநாயகம் இருந்து வந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் சென்னையில் நேற்று பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கேசவ விநாயகத்தை விடுவிக்கவும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பதவி கொடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கேசவ விநாயகத்திடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது, “தாம் ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்; மாற்றம் இயல்பானது” என கூறினார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share