கேரளாவுக்கு உரிய நிதியை விடுவிக்க கோரி மத்திய அரசுக்கு எதிராக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று ஜனவரி 12-ந் தேதி திருவனந்தபுரத்தில் போராட்டம் நடைபெற உள்ளது.

கேரளா முதல்வர் பினராயி விஜயன் தமது எக்ஸ் பக்கத்தில், “மத்திய அரசுஇ கொடுக்கும் நிதி நெருக்கடிக்கு எதிராக ஜனவரி 12-ந் தேதி சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசுக்கு, கேரளாவின் எதிர்ப்பை தெரிவிக்கும் இந்த போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் பொதுமக்கள் பங்கேற்பர். கேரளாவுக்கான கடன் வரம்பை ரூ17,000 கோடி குறைத்துவிட்டது மத்திய அரசு.
நிலம் கையகப்படுத்துதலுக்கான மத்திய அரசின் நிலுவைத் தொகை ரூ6,000 கோடி. ஜிஎஸ்டி வரி வசூலில் ரூ.965 கோடி நிறுத்தி வைத்துள்ளது மத்திய அரசு” என தெரிவித்துள்ளார்.
