தவெக மாவட்ட செயலாளர் சதீஷ் குமாருக்கு முன் ஜாமின் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த செப்டம்பர் 27ஆம் நாமக்கல் மாவட்டத்தில் விஜய் கலந்துகொண்ட பிரச்சார கூட்டத்தில் பலர் மயக்கமடைந்தனர்.
இந்தநிலையில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், செந்தில்குமார், பிரபு, பாலகிருஷ்ணன், விக்னேஷ், இளையராஜா உட்பட 10 பேர் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனால் முன் ஜாமின் கேட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி செந்தில் குமார் முன் இன்று (அக்டோபர் 3) விசாரணைக்கு வந்தது.
அப்போது, கட்டுக்கடங்காத கூட்டத்தையும், தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டதையும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததையும் கட்சி ஏன் கட்டுப்படுத்தவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து அரசு வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, ‘பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் உட்பட தவெக நிர்வாகிகள் மீது 9 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதி செந்தில்குமார், நாமக்கல் மாவட்ட செயலாளர் என்.சதீஷ்குமாருக்கு முன் ஜாமின் வழங்கமறுப்புத் தெரிவித்து அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இன்னும் சற்று நேரத்தில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் முன்ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.