கரூரில் நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக பிரச்சாரக் கூட்டம் நேற்று நடந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள கரூர் சம்பவத்தை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் கரூரில் குவியத் தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துபாயில் இருந்த நிலையில் தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு அவர் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் 39 பேரில் 13 பேர் ஆண்கள், 17 பேர் பெண்கள், குழந்தைகள் 9பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 32 பேர், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 2 பேர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 2 பேர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 30 பேர் உடல் பிரேத பரிசோதனைக்க பின் உறவினர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. 7 அமைச்சர்கள் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலித்தி உள்ளோம்.
அரசு சார்பாக என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்துள்ளோம்.
கரூர் மாவட்டத்தில் உள்ள 200 மருத்துவர்கள் மற்றம் மருத்துவ பணியாளர்கள் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அது தவிர சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, கோவை, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து மொத்தம் 145 மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.என தெரிவித்தார்.
எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு குறித்த வேள்விக்கு, இந்த இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை. அதற்காகதான் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை ஆணைத்தின் அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.