ADVERTISEMENT

41 பேர் பலியான கரூர் துயரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை- சிபிஐ அறிக்கை தாக்கல்?

Published On:

| By Mathi

no need of cbi in karur stampede : tn govt in sc

தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான துயரம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் இன்று பிப்ரவரி 3-ந் தேதி விசாரிக்கிறது. இன்றைய விசாரணையின் போது, சிபிஐ அறிக்கை தாக்கல் செய்யக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி விஜய் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது.

ADVERTISEMENT

கரூரில் முதலில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், விஜய் உள்ளிட்டோரை டெல்லிக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். டெல்லியில் விஜய்யிடம் 2 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் கரூர் துயர வழக்கின் விசாரணை இன்று நடைபெற உள்ளது. இன்றைய விசாரணையின் போது, சிபிஐ தமது இடைக்கால விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share