கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் நெருக்கடிக்குள்ளாகி இருக்கும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, 5 பேருடன் தனி விமானத்தில் டெல்லி சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தவெக தலைவர் நடிகர் விஜய் கரூரில் நடத்திய பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகிகள் மதியழகன், பவுன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளனர். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் நிர்மல் குமார் மற்றும் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். முன்னதாக, கலவரத்தைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக ஆதவ் அர்ஜூனா மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த பரபரப்பான- நெருக்கடியான சூழ்நிலையில் ஆதவ் அர்ஜூனா திடீரென டெல்லி சென்றுள்ளார் என்கின்றன தகவல்கள்.
சென்னையில் இருந்து தனி விமானத்தில் 5 பேருடன் ஆதவ் அர்ஜூனா டெல்லி சென்றுள்ளது கவனம் பெற்றுள்ளது.