கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டை அதிகரித்து வழங்குவது தொடர்பாக விஜய் தரப்பும், தமிழக அரசும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த விஜய்யின் தவெக பிரச்சாரக் கூட்டத்தில், சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தநிலையில் கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த மனுக்கள் இன்று (அக்டோபர் 3) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் ஜோதிராமன் மற்றும் தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இழப்பீட்டை உயர்த்தி வழங்குவது தொடர்பாக அரசும், விஜய் தரப்பும் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.