கரூரில் 41 பேர் பலியான துயரம்.. செந்தில் பாலாஜியிடம் சிபிஐ இன்று விசாரணை

Published On:

| By Mathi

Senthil Balaji Karur

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று டெல்லியில் விசாரணை நடத்துகின்றனர்.

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்.

ADVERTISEMENT

இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் தற்போது டெல்லியில் விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக தலைவர் விஜய்யிடம் 3 முறை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தவெக நிர்வாகிகள், அரசு அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கரூர் துயர சம்பவத்துக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் உள்ளே நுழைந்து மயக்க மருந்து அடித்து தாக்கினர் என தவெகவினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இது தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் டெல்லியில் இன்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share