கரூர் பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் திட்டமிட்டு தாமதமாக வந்ததுதான் காரணம் என்று பெண்கள் பாதுகாப்பு மற்றும் பாலின நீதிக் கூட்டியக்கத்தின் உண்மை கண்டறியும் குழு குற்றம் சாட்டி உள்ளது.
சமூக செயற்பாட்டாளர் பேராசிரியர் சரசுவதி தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள்:
- கரூர் கொடுந்துயர் சம்பவத்திற்கு காரணம் எவருடைய சதியோ, உள்நோக்கமோ இல்லை
- கரூர் துயரத்துக்கு முதன்மைக் காரணம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் மிக காலதாமதமாக வந்ததுதான்.
- காலை 8.45 மணிக்கு நாமக்கல்லில் பரப்புரையை தொடங்க வேண்டிய விஜய் சென்னையிலிருந்தே 8.45-க்கு தான் புறப்பட்டார். இதுதான் அடுத்தடுத்த தாமதத்திற்கு தொடக்கம்
- கரூர் வரும் சாலையில் பல இடங்களில் விஜய் வாகனம் வேண்டுமென்றே மெதுவாக இயக்கப்பட்டது
- வேலுசாமிபுரத்தில் தெருக்களில் இருசக்கர வாகனங்கள் அதிகமாக நிறுத்தப்பட்டிருந்தன; இதை காவல்துறை தடுக்கவில்லை
- கூட்டத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே விஜய் தாமதமாக வந்துள்ளார்
- கூட்ட நெரிசலில் மக்கள் பாதிக்கப்பட்ட போதுதான் விஜய்யின் கவனத்தை ஈர்க்க செருப்பு வீசப்பட்டது
- விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்
கரூர் துயரம் தொடர்பான உண்மை கண்டறியும் குழுவின் முழு அறிக்கை: