கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று நடத்திய பிரச்சார கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் கரூர் தமிழக வெற்றி கழகத்தின் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் ஒரே குடும்பத்தில் தாய் பிள்ளைகள் மூவர் மரணம் அடைந்துள்ளனர். கரூர் விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்த ஆனந்த ஜோதி மனைவி ஹேமலதா, மகள் சாய் லெட்சனா, சாய்ஜீவா மூவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள்
இதேபோல் கரூர் ஏமூர் புத்தூர் கிராமம் சேர்ந்த சக்திவேல் மனைவி பிரியதர்ஷினி, மகள் தரணிகா, ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் வேலுசாமிபுரம் கோதுர ரோடு பகுதியை சேர்ந்த பெருமாள் மனைவி பழனியம்மாள், அவரது மகள் கோகிலா இருவர் உயிரிழந்தனர். இப்படி மூன்று குடும்பத்தில் தாய் மகள் இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.