ADVERTISEMENT

கரூர் பெருந்துயரம் : சிபிஐ விசாரணைக்கு நீதிபதிகள் மறுப்பு!

Published On:

| By Kavi

கரூர் பெருந்துயரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மறுப்புத் தெரிவித்துள்ளது.

கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 7 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

1.கரூரைச் சேர்ந்த அட்டோ ஓட்டுநர் செந்தில்கண்ணன் தாக்கல் செய்த மனுவில், ’இதுபோன்ற கூட்டங்களுக்கு வழிமுறைகளை வகுக்க வேண்டும். தவெக கூட்டங்களுக்கு காவல்துறை அனுமதி வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

2. மதுரையைச் சேர்ந்த கே. கதிரேசன் தாக்கல் செய்த மனுவில், ’பொது நிகழ்வுகளுக்கு பாதுகாப்பு நெறிமுறையை உருவாக்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு வைப்புத்தொகை செலுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

3.திமுகவைச் சேர்ந்த அம்பாசமுத்திரம் நகராட்சித் தலைவர் கே.கே.சி.பி. பிரபாகர பாண்டியன் தாக்கல் செய்த மனுவில், ‘கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான விசாரணை முடியும் வரை திருநெல்வேலி மாவட்டத்தில் எந்த வகையான தவெக பொதுக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது’ என்று கோரியிருந்தார்.

4.கரூரைச் சேர்ந்த எம். தங்கம் தாக்கல் செய்த மனுவில், ‘கூட்டக் கட்டுப்பாடு மற்றும் மக்கள் கூட்ட மேலாண்மைக்கான விரிவான வழிகாட்டுதல்களை வகுக்க உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

5. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், ‘கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்குரூ.10 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

6.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும், தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவருமான எம்.எல். ரவி தாக்கல் செய்த மனுவில், ’கரூர் துயர சம்பவத்தில் சதி நடந்திருப்பதாக கூறப்படுவதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

7.பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ். மணி, ‘கரூர் துயர சம்பவம் குறித்து சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த மனுக்கள் இன்று (அக்டோபர் 3) நீதிபதிகள் ஜோதிராமன் மற்றும் தண்டபாணி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ விசாரணை கோரும் மனுக்களை எதிர்த்து அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ ஆஜராகி வாதாடினார்.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ’நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படும் வரை தேசிய நெடுஞ்சாலைகளில் பொதுக் கூட்டங்களுக்கு எந்த அரசியல் கட்சிக்கும் காவல்துறை அனுமதி வழங்காது’ என்று அறிக்கை சமர்ப்பித்தார்.

இந்தநிலையில், சிபிஐ விசாரணைக்கு மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள் இதுதொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share