ADVERTISEMENT

‘கொலையாளியே! வெளியே வா! கேரவனுக்குள் ஒளியாதே!’.. சென்னையில் விஜய் வீடு முற்றுகை!

Published On:

| By Mathi

Karur Vijay TVK Protest

கரூரில் 39 உயிர்களை பலி கொண்ட பிரசாரம் கூட்டம் நடத்திய தவெக தலைவர் நடிகர் விஜய்யின் சென்னை நீலாங்கரை வீட்டை முற்றுகையிட்டு இன்று (செப்டம்பர் 28) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூரில் விஜய் நேற்று பிரசாரம் செய்தார். இந்த பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகினர். பிஞ்சு குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 39 பேர் பலியான சம்பவம் இந்தியாவையே உறைய வைத்துள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலையில் கரூர் பிரசாரத்தை முடித்துவிட்டு தனி விமானம் மூலம் விஜய் சென்னை திரும்பினார். இதனிடையே சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டு முன்பாக சில அமைப்பினர் இன்று காலை திடீரென ஒன்று திரண்டனர்.

அப்போது,

ADVERTISEMENT

வெளியே வா! வெளியே வா!
கொலையாளியே வெளியே வா!
கேரவனுக்குள் ஒளியாதே!
கேரவனுக்குள் ஒளியாதே!

பதில் சொல்! பதில் சொல்!
குழந்தைகளின் உயிர்களுக்கு பதில் சொல்!

ADVERTISEMENT

என்பது உள்ளிட்ட முழக்கங்களுடன் விஜய்யை கண்டித்து கண்டன போராட்டம் நடைபெற்றது. இதனால் சென்னை நீலாங்கரையில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share