ADVERTISEMENT

காந்தாரா லெஜண்ட் – சாப்டர் 1 திரைப்படம் வசூல் சாதனை – முழுவிவரம்!

Published On:

| By christopher

kantara Legend - Chapter 1 Collection Record!

காந்தாரா படத்தின் தொடர்ச்சியாக ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘காந்தாரா: லெஜண்ட் – சாப்டர் 1’. இதில் ருக்மணி வசந்த், ஜெயராம், சம்பத் ராம் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளிலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

கடந்த அக்டோபர் 2ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் உலகளவில் முதல் நாளில் சுமார் ரூ. 61.85 கோடிக்கு மேல் வசூலித்தது.

ADVERTISEMENT

அதன் தொடர்ச்சியாக கடந்த 15 நாட்களில் இந்தியாவில் 585 கோடி ரூபாயும், வெளிநாட்டில் 100 கோடி ரூபாயும் என மொத்தம் உலகளவில் 717.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

இந்திப் பதிப்பில் மட்டும் சுமார் ரூ. 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இதன்மூலம் இந்தாண்டு அதிக வசூல் செய்த படமாக காந்தாரா: லெஜண்ட் – சாப்டர் 1 திரைப்படம் இரண்டாவது இடத்தில் உள்ளது. விக்கி கௌஷல் நடிப்பில் வெளியான வரலாற்றுத் திரைப்படமான ‘சாவா’ ரூ.800 கோடி வசூலுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share