ADVERTISEMENT

ஒரு வாரத்தில் திருமண வரவேற்பு… புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!

Published On:

| By Kavi

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருமண வரவேற்புக்காக பத்திரிகை வைக்க சென்றபோது புது மாப்பிள்ளை உட்பட மூன்று பேர் விபத்தில் உயிரிழந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த மாடாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(43). இவரது மகன் நாராயணன் (22).

ADVERTISEMENT

சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்றது. வரும் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெறவிருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக தயாராகி வந்தனர்.

ஆறுமுகம், புது மாப்பிள்ளை நாராயணன், தாய் சென்னியம்மாள் மூன்று பேரும் உறவினர்களுக்கு பத்திரிகை வைத்து வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து வந்தனர்.

ADVERTISEMENT

அந்தவகையில் நேற்று மாலை உறவினர்களுக்கு பத்திரிகை வைத்து முடித்துவிட்டு டிஎண்15 எம்சி 2459 என்ற பதிவெண் கொண்ட ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் மூவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

பகண்டை கூட்ரோடு அருகே சென்ற போது எதிர்திசையில் டிஎண்10 ஏக்யூ 4305 என்ற பதிவெண் கொண்ட போர்டு பிகோ கார் வந்து கொண்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், நாராயணன் சென்ற பைக் மீது கார் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பைக்கில் சென்ற ஆறுமுகம், சென்னியம்மாள், நாராயணன் ஆகிய மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர்.பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி மூன்று பேரும் உயிரிழந்தனர்.

அந்த காரை இயக்கி வந்தது கள்ளக்குறிச்சி மாவட்ட தவெக பொருளாளர் சுந்தரமூர்த்தி என்பது தெரியவந்தது.

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பகண்டைகூட்ரோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share