ADVERTISEMENT

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிப்பு.. சாய்பல்லவி, மணிகண்டன், யேசுதாஸ் தேர்வு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Kalaimamani Awards of the Government of Tamil Nadu

தமிழக அரசு சார்பில் இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

அதன் அடிப்படையில் கடந்த 2021,2022 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

தமிழக அரசின் கலைமாமணி விருதாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் விருது வழங்கி சிறப்பிக்க உள்ளார். தமிழ்நாட்டில் கலைமாமணி விருதுபெறும் கலைஞர்களுக்கு மூன்று சவரன் தங்கப் பதக்கமும், விருது பட்டயமும் வழங்கப்பட உள்ளது.

எஸ்.ஜே.சூர்யா, சாய்பல்லவி, லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் ஆகியோருக்கு 2021 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர் விக்ரம் பாபு, ஜெயா வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா, டைமண்ட் பாபு, டி. லட்சுமிகாந்தன் ஆகியோருக்கு 2022ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் நடிகர் மணிகண்டன், ஜார்ஜ் மரியான், இசையமைப்பாளர் அனிரூத், பாடகி ஸ்வேதா மோகன், சாண்டி மாஸ்டர் நிகில் முருகன் ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது

ADVERTISEMENT

இந்நிலையில் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பாடகர் கே.ஜே.யேசுதாஸ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த கலை மன்றமாக ராஜா அண்ணாமலை மன்றமும், நாடக குழுவாக மதுரை எம்.ஆர்.முத்துசாமி நினைவு நாடக மன்றமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பால சரஸ்வதி விருது முத்து கண்ணம்மாளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, கவிஞர் நெல்லை ஜெயந்தா, சமயச் சொற்பொழிவாளர் எஸ்.சந்திரசேகருக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.

மேலும் சின்னத்திரை நடிகர்கள் பி.கே.கமலேஷ், நடிகை ஜெயா வி.சிகுகநாதன், மெட்டிஒலி காயத்ரி ஆகியோருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share