காங்கிரஸ்- தவெக பேச்சு? அதிமுகவுக்கு ரிட்டர்ன்? செங்கோட்டையன் பதில் என்ன?

Published On:

| By Mathi

K. A. Sengottaiyan

காங்கிரஸ் கட்சியுடன் தமிழக வெற்றிக் கழகம் பேச்சுவார்த்தை நடத்துகிறதா? என்ற கேள்விக்கு, “நல்லதே நடக்கும்” என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பிப்ரவரி 26-ந் தேதி கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது: தவெகவில் மரியாதை இல்லாததால் அதிமுகவுக்கே சிலர் திரும்ப வர விரும்புவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார். தவெகவில் எனக்கு என்ன மரியாதை இங்கே கொடுத்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அதற்கெல்லாம் உதாரணம் காட்டத் தேவையில்லை.

ADVERTISEMENT

யார் வேட்பாளர் என்று அறிவிக்கட்டும், எத்தனை பேர் எங்களை நாடி வருகிறார்கள் என்பதை காணப்போகிறீர்கள்.

சசிகலா தெளிவாக சொல்லி இருக்கிறார்.. நெஞ்சிலே குத்தியிருக்கிறார்கள் என.. கணவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது 15 நாட்கள் சிறைச்சாலையில் அனுமதி கொடுத்தாலும் கூட, இங்கே 5 நாட்கள் தான் அனுமதி வழங்க வேண்டும் என்று யார் பேசினார் என சசிகலா வெளிப்படுத்தி இருக்கிறார். துரோகத்தின் மொத்த உருவமாக இருக்கின்றவர் பேச்சைப் பற்றி எனக்குக் கவலையில்லை இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ADVERTISEMENT

தவெக- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு, “ நல்லதே நடக்கும்” என பதிலளித்தார் கே.ஏ.செங்கோட்டையன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share