நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு கண்டனம்-தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்களில் ஆர்ப்பாட்டம்!

Published On:

| By Mathi

Lawyers Protest Tamil Nadu

சமூக செயற்பாட்டாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததைக் கண்டித்து (Justice G.R. Swaminathan Vs Advocate Vanchinathan) தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றங்கள் முன்பாக இன்று ஜூலை 28-ந் தேதி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், ஜாதி மற்றும் மத பாகுபாட்டுடன் நடந்து கொள்கிறார் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சமூக செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான வாஞ்சிநாதன் புகார் அனுப்பினார். அதில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் எந்தெந்த வழக்குகளில் ஜாதி, மத அடிப்படையில் நடந்து கொண்டார்; தீர்ப்பு அளித்தார் என்ற விவரங்களும் இணைக்கப்பட்டிருந்தன.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு தம் மீது புகார் அனுப்பிய காரணத்தால், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார் நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன். மேலும் நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், ராஜசேகர் அமர்வு முன்பாக இன்று ஜூலை 28-ந் தேதி வாஞ்சிநாதன் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டது.

நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு- புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. இதேபோல பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து நீதிபதி ஜிஆர் தமிழ்நாடு முழுவதும் சுவாமிநாதனுக்கு கண்டனம் தெரிவித்து நீதிமன்றங்கள் முன்பாக வழக்கறிஞர்கள் இன்று கண்டனப் போராட்டம் நடத்தினர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share