எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மாவட்ட நீதிபதி ப.உ.செம்மலுக்கு நீதி கோரி புதுச்சேரியில் சமூக, ஜனநாயக இயக்கங்கள் இன்று டிசம்பர் 22-ந் தேதி கண்டனப் போராட்டம் நடத்துகின்றன.

மக்கள் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் ஜெகன்நாதன் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. பங்கேற்று தொடக்க உரை நிகழ்த்துகிறார்.
இந்தப் போராட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட சமூக, ஜனநாயக இயக்கங்களின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். புதுச்சேரி ஒதியஞ்சாலை அண்ணா சிலை அருகில் இந்த கண்டனப் போராட்டம் நடைபெற உள்ளது.
