“ஐஐடி மெட்ராஸில் வேலை கிடைப்பது கனவு. ஆனால், இன்ஜினியரிங் படிக்காத எனக்கெல்லாம் அங்கு வாய்ப்பு கிடைக்குமா?” என்று நினைப்பவரா நீங்கள்? கவலையை விடுங்க. சென்னை ஐஐடியின் தொழிற்துறை ஆலோசனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (IC&SR) காலியாக உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்ப தற்போது ஒரு சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்வு கிடையாது, நேர்காணல் மட்டும்தான்! அதுவும் அறிவுசார் சொத்துரிமை (IP Cell) பிரிவில் வேலை என்பதால், எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி இருக்கும்.
வேலை என்ன?
ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Junior Executive) பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐஐடி மெட்ராஸில் உருவாக்கப்படும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமை (Patent) மற்றும் ஆவணங்களைப் பராமரிக்கும் அறிவுசார் சொத்துரிமைப் பிரிவில் (IP Cell) இந்தப் பணி இருக்கும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Graduate Degree) முடித்திருக்க வேண்டும்.
- கூடுதல் தகுதி: காப்புரிமை (Patents), டிரேட்மார்க் போன்றவை குறித்த அடிப்படை புரிதல் இருப்பது அவசியம். கணினியில் எக்செல் (Excel) மற்றும் எம்எஸ் ஆபீஸ் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும்.
- அனுபவம்: பிரஷர்கள் (0 ஆண்டுகள்) முதல் 2 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் எவ்வளவு?
திறமை மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப சம்பளம் மாறுபடும்.
- மாதம் ரூ.18,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தற்காலிகப் (Contract) பணி என்றாலும், ஐஐடி வளாகத்தில் வேலை பார்ப்பதே ஒரு தனி கெத்துதான்!
தேர்வு முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர்கள் நேரடியாக நேர்காணலுக்கு (Interview) அழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ளவர்கள் https://icsrstaff.iitm.ac.in/careers/current_openings.php என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
- இணையதளத்தில் ‘Advt. No. 207/2025’ என்ற விளம்பரத்தைத் தேடிக் கண்டறியவும்.
- அதில் உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு ‘Apply’ கொடுத்து விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜனவரி 4, 2026.
“டிகிரி முடிச்சுட்டு சும்மா இருக்கேன்”னு சொல்றதை விட, “ஐஐடி மெட்ராஸ்ல வேலை பார்க்குறேன்”னு சொல்றது எவ்வளவு பெருமை! உடனே சிவியை (CV) ரெடி பண்ணுங்க. மேலும் விவரங்களுக்கு ஐஐடி மெட்ராஸ் IC&SR இணையதளத்தைப் பார்வையிடவும்.
