“சென்னை சிட்டிக்குள்ள ஒரு கவர்மெண்ட் வேலை கிடைச்சா எப்படி இருக்கும்? அதுவும் அமைதியான கோயில் சூழல்ல வேலைன்னா சும்மா விடுவோமா?” என்று காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு, பரங்கிமலையில் இருந்து ஒரு அழைப்பு வந்திருக்கிறது.
சென்னை, பரங்கிமலை (St. Thomas Mount) மேற்கு மாட வீதியில் அமைந்துள்ள அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் காலியாக உள்ள ‘இளநிலை உதவியாளர்’ (Junior Assistant) பணியிடத்தை நிரப்ப தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலை என்ன?
கோயில் நிர்வாகத்தில் கணக்கு வழக்கு பார்ப்பது, அலுவலகக் கோப்புகளைப் பராமரிப்பது போன்ற இளநிலை உதவியாளருக்கான பணிகள். இது இந்து சமய அறநிலையத்துறையின் (TNHRCE) கட்டுப்பாட்டில் வரும் பணி என்பதால், பணிப்பாதுகாப்பு உறுதி.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
- மதம்: விண்ணப்பதாரர் கண்டிப்பாக இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். இறை நம்பிக்கை அவசியம்.
- கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும்.
- கூடுதல் தகுதி: தமிழ் மொழியில் பிழையில்லாமல் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் நபருக்கு, அரசு நிர்ணயித்த ஊதிய விகிதப்படி சம்பளம் வழங்கப்படும்.
- ஊதிய நிலை: Level-8.
- மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை (சம்பள விகிதம் மாறுதலுக்கு உட்பட்டது) சம்பளம் மற்றும் இதர படிகள் கிடைக்கும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு அரசு விதிகளின்படி (32 முதல் 37 வரை) மாறுபடும். இது குறித்த முழு விவரத்தை அறிவிப்பில் சரிபார்த்துக் கொள்ளவும்.
விண்ணப்பிப்பது எப்படி?
விருப்பமுள்ளவர்கள் நேரில் அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அத்துடன் கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ், முன்னுரிமைச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணமாக ரூ.100க்கு, “செயல் அலுவலர், அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்” என்ற பெயரில் டிமாண்ட் டிராஃப்ட் (DD) எடுத்து இணைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் அலுவலர்,
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்,
மேற்கு மாட வீதி, பரங்கிமலை,
சென்னை – 600 016.
கடைசி தேதி:
விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 17.01.2026 (மாலை 5.45 மணிக்குள்).
விண்ணப்ப உறையின் மேலே “இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பம்” என்று பெரிய எழுத்துக்களில் எழுத மறக்காதீர்கள். ஆன்லைனில் அப்ளை பண்ண முடியாது என்பதால், கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனே தபாலில் அனுப்பி விடுவது நல்லது.
