மைனர் பசங்க.. வல்கர் வாரியர்ஸ்.. Its very Wrong விஜய் அண்ணா.. மீண்டும் ஜூலி வீடியோ!

Published On:

| By Mathi

Julie Vijay

தமிழக வெற்றிக் கழகத்தினர் தம்மை விமர்சிப்பதை முன்வைத்து நடிகை ஜூலி மீண்டும் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார்.

வேலூரில் பிரசார கூட்டத்தில் பேசிய விஜய், ஜல்லிக்கட்டு காளைகளை அடக்குவது பற்றி பேசியிருந்தார். இதனையடுத்து ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அடையாளம் பெற்று நடிகையான ஜூலி, ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

ADVERTISEMENT

அதில், “ஜல்லிக்கட்டுக்கு புல்கட்டை காண்பிக்க சொல்லும் குட்டிக்கதையை நீங்க சொல்லிட்டுப் போயிட்டீங்க. .அதையும் நம்பி உங்க தொண்டர்கள் ஜல்லிக்கட்டுக்குப் புல் கட்டை காண்பிக்க போய் விபரீதம் நடந்துவிடப் போகிறது” என கிண்டலடித்திருந்தார் ஜூலி.

இதனையடுத்து ஜூலியை கடுமையாக விமர்சித்து தவெகவினர் அடுத்தடுத்து வீடியோ வெளியிட ஜூலியும் பதிலடி கொடுத்து வருகிறார்.

ADVERTISEMENT

தற்போது லேட்டஸ்ட் வீடியோ வெளியிட்டுள்ள ஜூலி, தவெகவினரை ‘மண்டையில’ மைனர் பசங்க.. வல்கர் வாரியர்ஸ் என சரமாரியாக விமர்சித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share