நடிகரும், தவெக தலைவருமான விஜய் போட்டியிரும் பெரம்பூர் பகுதியில் அவருக்கு எதிராக உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு ஜூலி கவனம் ஈர்த்த்துள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்த சீமான் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்நிலையில் நேற்று (மார்ச் 29) முதல் முறையாக தேர்தல் களம் காணும் நடிகரும், தவெக தலைவருமான விஜய் தனது வேட்பாளர்களை அறிவித்து உள்ளார்.
முன்னதாக வேலூர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய் ஜல்லிக்கட்டு காளை குறித்த குட்டிக்கதை சொல்லி இருந்தார். விஜய்யின் அந்த கருத்தை எதிர்த்து ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கவனம் ஈர்த்து பிரபலமடைந்திருந்த ஜூலி தனது என்ஸ் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் ஜூலிக்கு எதிராக காட்டமான விமர்சனங்களை வெளியிட்டு வந்தனர். இதைதொடர்ந்து ஜூலியும் விஜய்க்கும், தவெக கட்சியினருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் விஜய் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என ஜூலி தனது எக்ஸ் பதிவில் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 தொகுதிகளில் தான் போட்டியிடுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று ஜூலி பெரம்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு போடுங்கம்மா ஓட்டு என்று கூட்டத்தினர் மத்தியில் முழக்கமிட்டார்.. பின்னர் அண்ணே நீ நாளைக்கு தான் பிரச்சாரத்திற்கு வர.. நா இன்னைக்கே ஆரம்பிச்சுட்டே.. வா.. அண்ணே பார்ப்போம்” என தெரிவித்தார்.
அது குறித்த வீடியோவை ஜூலி தனது தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டு கவனம் ஈர்த்துள்ளார்.
