மாநிலம் தன் குடிமகனையே கொன்றுள்ளது : லாக் அப் மரண வழக்கில் நீதிபதிகள் வேதனை!

Published On:

| By Kavi

judges order in youth ajithkumar lockup death case

திருப்புவனம் இளைஞர் லாக் அப் மாரண வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, “மாநிலம் தன் குடிமகனையே கொன்றுள்ளது’ என வேதனை தெரிவித்துள்ளது. judges order in youth ajithkumar lockup death case

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸ் விசாரணையின் போது கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக மக்களை உலுக்கியுள்ளது.

இந்நிலையில் அஜித்குமார் மரணம் தொடர்பாக அதிமுக வழக்கறிஞர் அணி மாநில இணைச் செயலாளர் மாரீஸ்குமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜூலை 1) காலை நீதிபதிகள் எம்.எஸ்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளாட்  அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனித உரிமை போராளியும் வழக்கறிஞருமான ஹென்றி திபேன் ஆஜராகி, ”அஜித் குமார் மரணத்திற்கு பிறகு திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரி ஆகியோர் அவரது வீட்டுக்கு சென்று, 50 லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும், போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்ற போது வலிப்பு வந்து அஜித்குமார் உயிரிழந்ததாக கூற வேண்டும் என்றும் சமரசம் பேசியுள்ளனர்” என்று வாதம் முன்வைத்தார்.

வழகக்றிஞர் மாரீஸ் குமார் ஆஜராகி, “இந்த வழக்கில் காவல்துறைக்கு ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் அழுத்தம் கொடுத்துள்ளார். தற்போது வரை இளைஞரின் பிரேத பரிசோதனை அறிக்கையை போலீசார் அவரது குடும்பத்தினரிடம் கொடுக்கவில்லை. அஜித்தை மடப்புரம் கோயில் பின்னால் வைத்து போலீசார் சுற்றி நின்று தாக்குவதை ஒரு நபர் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துள்ளார்” என்று தெரிவித்து அந்த வீடியோவை நீதிபதி முன் சமர்ப்பித்துள்ளார்.

இந்த வீடியோவை மறைந்திருந்து பதிவு செய்த கோயில் உதவியாளரும் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்.

இதையடுத்து நீதிபதிகள், “அரசு மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும். அஜித்தை ஏன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தவில்லை?. சிவகங்கை மாவட்ட எஸ்பி உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்டதற்கு என்ன காரணம்? புலனாய்வு செய்வதற்குதான் காவல்துறை சிசிடிவி பதிவை மறைக்க விரும்புகிறீர்களா?

வெளியிடங்களுக்கு அழைத்துச் என்று விசாரிக்க அதிகாரம் கொடுத்தது யார்? முழு உண்மையையும் காவல்துறை சொல்ல மறுக்கிறீர்கள். யார் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்தது?

பிரேத பரிசோதனை அறிக்கை எங்கே? இன்று மதியம் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என்று காவல்துறை தலைமைக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து வழக்கு மதியம் விசாரணைக்கு வந்த போது போலீசார் சார்பில், பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதை படித்த நீதிபதிகள், மாநிலமே தன் குடிமகனை கொன்றுள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்கள், “இது சாதாரண கொலை போல் இல்லை.. அஜித் உடலில் காயம் இல்லாத பாகமே இல்லை. இந்த பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சியளிக்கிறது. 44 இடங்களில் காயங்கள் உள்ளன. எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் சிறப்புப்படை எப்படி வழக்கை கையில் எடுத்தது.

அதிகாரமே இந்த மனநிலையை காவல்துறைக்கு தந்துள்ளது. இந்த தாக்குதலை நடத்திய காவல்துறை குழுவை இயக்கியது யார்? அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவலர்கள் கைதெல்லாம் கண் துடைப்பு நாடகம்.

இரண்டு நாட்கள் இளைஞரை வண்டியில் வைத்துக்கொண்டு சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் சுற்றியிருக்கிறார்கள். இனி வரும் காலங்களில் காவல்துறை இதுபோல் செயல்படக்கூடாது” என்று கூறி தொடர்ந்து நீதிபதிகள் உத்தரவை வாசித்து வருகின்றனர். judges order in youth ajithkumar lockup death case

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share