அஜித் குமார் லாக் அப் மரணம் தொடர்பாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் இன்று (ஜூலை 2) ஆய்வு செய்தார்.
கடந்த ஜூன் 27-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்தநிலையில், போலீஸ் விசாரணையில் அஜித் குமார் கடுமையாக தாக்கப்பட்டதால் உயிரிழந்தார்.
இது தொடர்பாக அதிமுக சார்பில் வழக்கறிஞரணி இணைச் செயலாளர் மாரிஸ் குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை நேற்று (ஜூலை 1) விசாரித்த நீதிபதிகள், எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் மரியா கிளாட் அமர்வு, “போலீசாரால் அஜித் குமார் மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் 44 இடங்களில் காயம் உள்ளது” என்று கடுமையான கண்டித்தனர். மேலும், இந்த வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரித்து முதற்கட்ட அறிக்கையை ஜூலை 8-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து திருப்புவனம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் உள்ளிட்ட போலீசாரிடம் அஜித் குமார் லாக் மரணம் தொடர்பாக நீதிபதி ஜான் சுந்தர்லால் இன்று விசாரணை நடத்தி வருகிறார். தொடர்ந்து மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் விசாரணை நடத்த உள்ளார். இதனையடுத்து கோவில் ஊழியர்கள் மற்றும் சம்பவம் நடந்தபோது கோவிலில் இருந்தவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த உள்ளார்.
காவல் நிலைய விசாரணையில் இளைஞர் அஜித் குமார் அடித்துக் கொல்லப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. Judge john sunderlal investigate thirupuvanam