மூன்று நாள் பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (மே 2) சென்னை வருகிறார்.
கடந்த மாதம் பாஜக மாநில புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அப்போது சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுக, பாஜக கூட்டணியை உறுதி செய்தார். jp nadda chennai visit
இந்தநிலையில், மாநில தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதன்முறையாக டெல்லி சென்ற நயினார் நாகேந்திரன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தநிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மூன்று நாள் பயணமாக ஜே.பி.நட்டா இன்று தமிழகம் வருகிறார்.
இன்று மாலை 4.10 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் ( 6E 668) 5.25 மணிக்கு சென்னை வந்தடைகிறார். அவரை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சென்னை விமான நிலையத்தில் வரவேற்கின்றனர்.
நாளை மே 3-ஆம் தேதி காலை 8 மணிக்கு பாஜகவின் மையக்குழு கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்து கொள்கிறார். இதனையடுத்து காலை 10 மணிக்கு எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சைவ சித்தாந்த கருத்தரங்கில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். பின்னர் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை பாஜக நிறுவன கூட்டத்தில் ( Organizational meeting) கலந்து கொள்கிறார்.

நாளை மறுதினம் மே 4-ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். பின்னர் மாலை 3.40 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் ( 6E 6158) மூலம் ஹைதராபாத்திற்கு செல்கிறார்.
ஜே.பி.நட்டாவின் தமிழக வருகையின் போது கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, 2026 தேர்தலுக்கு தயாராவது, அதிமுக கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. jp nadda chennai visit