ராஜபாளையத்தில் ஜான் பாண்டியன் மனைவி போட்டி

Published On:

| By Pandeeswari Gurusamy

John Pandian's Wife to Contest in Rajapalayam

தமிழக சட்டமன்றத் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில் திமுக, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

திமுக, அதிமுக கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்கள் அறிவிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் அதிமுக கூட்டணியில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அந்தத் தொகுதியில் வேட்பாளர் குறித்து நேற்று ஜான்பாண்டியன் ஆலோசனை நடத்திய நிலையில், ஜான்பாண்டியன் மனைவி பிரிசில்லா பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கூட்டணிக் கட்சியான பாஜகவின் தாமரை சின்னத்தில் ராஜபாளையம் பொதுத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share