“என்னப்பா… முதல் தடவை ஜேஇஇ (JEE) எக்ஸாம் சரியா எழுதலையேன்னு கவலையா இருக்கா? இல்ல, ஃபர்ஸ்ட் ரவுண்டுல விட்டதை செகண்ட் ரவுண்டுல பிடிச்சு ஒரு டாப் இன்ஜினியரிங் காலேஜ்ல சீட் வாங்கணும்னு வெறியோட இருக்கீங்களா? உங்களுக்காகவே ஒரு கோல்டன் டிக்கெட் ரெடியா இருக்கு!”
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி (IIT), என்ஐடி (NIT) ஆகியவற்றில் சேருவதற்கான ஜேஇஇ மெயின் 2026 (JEE Main 2026) இரண்டாம் கட்டத் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு இப்போது அதிரடியாகத் தொடங்கியுள்ளது. “செஷன்-1-ல ஸ்கோர் கம்மியாகிடுச்சு பாஸ்” அப்படின்னு ஃபீல் பண்றவங்க, இந்த ஏப்ரல் அட்டெம்ப்ட்ல பட்டையைக் கிளப்பலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முக்கியமான தேதிகள்: தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இதோ முக்கியமான ‘டெட்லைன்’ விபரங்கள்:
- விண்ணப்பம் தொடங்கும் நாள்: பிப்ரவரி 1, 2026.
- விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 25, 2026 (இரவு 9:00 மணி வரை).
- கட்டணம் செலுத்த கடைசி நாள்: பிப்ரவரி 25, 2026 (இரவு 11:50 மணி வரை).
- தேர்வு நடைபெறும் நாட்கள்: ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 9, 2026 வரை (பல்வேறு கட்டங்களாக நடைபெறும்).
- முடிவுகள் வெளியீடு: ஏப்ரல் 20, 2026-க்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாரெல்லாம் அப்ளை பண்ணலாம்? (Eligibility Check):
- கல்வித்தகுதி: 2024 அல்லது 2025-ல் பிளஸ் 2 முடித்தவர்கள் அல்லது தற்போது 2026-ல் பிளஸ் 2 தேர்வு எழுதப்போகும் மாணவர்கள் தாராளமாக அப்ளை பண்ணலாம்.
- யார் விண்ணப்பிக்கலாம்?: முதல் கட்டத் தேர்வை எழுதாதவர்களும் இப்போது புதிதாக விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே ஜனவரி தேர்வை எழுதியவர்கள், தங்கள் பழைய அப்ளிகேஷன் நம்பர் மற்றும் பாஸ்வேர்டு வைத்தே லாகின் செய்து அப்ளை பண்ண முடியும்.
- வயது வரம்பு: இதற்கு ‘அப்பர் ஏஜ் லிமிட்’ (Upper Age Limit) எதுவும் கிடையாது பாஸ்!
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? (Exam Fees):
இந்தியாவிற்குள் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கட்டண விபரம்:
- பொதுப் பிரிவு (General) மாணவர்கள்: ரூ. 1,000/- (பெண்களுக்கு ரூ. 800/-).
- EWS மற்றும் OBC (NCL) மாணவர்கள்: ரூ. 900/- (பெண்களுக்கு ரூ. 800/-).
- SC / ST / மாற்றுத்திறனாளிகள் / மூன்றாம் பாலினத்தவர்: ரூ. 500/-.
இதை மறந்துடாதீங்க:
- ஆதார் கார்டு முக்கியம்: அப்ளை பண்ணும்போது உங்க ஆதார் கார்டுல இருக்குற பெயரும், மார்க் ஷீட்ல இருக்குற பெயரும் ஒரே மாதிரி இருக்கான்னு செக் பண்ணிக்கோங்க. சின்ன வித்தியாசம் இருந்தாலும் லாகின்ல பிரச்சனை வரும்.
- லாஸ்ட் மினிட் டென்ஷன்: பிப்ரவரி 25-ஆம் தேதி வரை டைம் இருக்கேன்னு மெத்தனமா இருக்காதீங்க பாஸ். கடைசி ரெண்டு நாள்ல சர்வர் ரொம்ப பிஸியாகும். அதனால முடிஞ்ச வரைக்கும் இப்போதே அப்ளை பண்ணிடுங்க.
- செஷன்-1 ரிசல்ட்: ஜனவரி தேர்வின் முடிவுகள் பிப்ரவரி 12-க்குள் வெளியாகிவிடும். அதைப்பார்த்துவிட்டு நீங்கள் செஷன்-2-க்கு இன்னும் தீவிரமாகத் தயாராகலாம்.
எப்படி விண்ணப்பிப்பது? மாணவர்கள் jeemain.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, “JEE Main 2026 Session 2 Registration” என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். பி.இ / பி.டெக் (Paper 1), பி.ஆர்க் (Paper 2A) அல்லது பி.பிளானிங் (Paper 2B) என உங்கள் விருப்பமான படிப்பைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
ஜேஇஇ தேர்வு என்பது வெறும் நுழைவுத் தேர்வு மட்டுமல்ல, அது உங்கள் எதிர்காலத்தை மாற்றப்போகும் ஒரு ஜாக்க்பாட் வாய்ப்பு. தமிழ் உட்பட 13 மொழிகளில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது என்பதால், நம் ஊர் மாணவர்கள் தயக்கமில்லாமல் இப்போதே களமிறங்குங்கள்!
