“ஐஐடி மெட்ராஸ், பாம்பேல படிக்கணும்னு வெறித்தனமா படிச்சிட்டு இருக்கீங்களா? என்ஜினீயரிங் கனவோடு ராப்பகலா கண்விழிக்கும் மாணவர்களுக்கு, அந்த முக்கியமான நாள் குறிக்கப்பட்டுவிட்டது!”
ஆம், இந்தியாவின் தலைசிறந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நுழைவுச்சீட்டு ரெடியாகிவிட்டது. 2026ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு (JEE Advanced 2026) தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யார் நடத்துகிறார்கள்?
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஐஐடி இந்தத் தேர்வை நடத்தும். அந்த வகையில், 2026ஆம் ஆண்டிற்கானத் தேர்வை நடத்தும் பொறுப்பு, புகழ்பெற்ற ஐஐடி ரூர்கிக்கு (IIT Roorkee) வழங்கப்பட்டுள்ளது. இவர்கள்தான் வினாத்தாள் தயாரிப்பது முதல் ரிசல்ட் வெளியிடுவது வரை அனைத்தையும் கவனிப்பார்கள்.
முக்கியத் தேதிகள் (ஷெட்யூல்):
ஐஐடி ரூர்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, தேர்வுகளுக்கான உத்தேச அட்டவணை இதோ:
- விண்ணப்பப் பதிவு ஆரம்பம்: ஆன்லைன் ரிஜிஸ்ட்ரேஷன் ஏப்ரல் 23, 2026 அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ரிசல்ட் எப்போது?: தேர்வுகள் மே மாதத்தில் நடத்தப்பட்டு, ஜூன் 2026க்குள் முடிவுகள் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
யாரெல்லாம் எழுதலாம்?
எல்லோரும் இந்தத் தேர்வை எழுதிவிட முடியாது. முதலில் நடைபெறும் ஜேஇஇ மெயின் (JEE Main) தேர்வில், அதிக மதிப்பெண் பெறும் முதல் 2.5 லட்சம் மாணவர்கள் மட்டுமே இந்த ‘அட்வான்ஸ்டு’ தேர்வை எழுதத் தகுதி பெறுவார்கள்.
தம்பிங்களா… ஐஐடி ரூர்கி பேப்பர் செட் பண்றாங்கன்னா சும்மா இல்ல, கொஞ்சம் ‘டஃப்’ ஆகத்தான் இருக்கும்னு சீனியர்ஸ் சொல்றாங்க. குறிப்பா மேக்ஸ் (Maths) கொஞ்சம் சுத்த விடுவாங்களாம். அதனால கான்செப்ட்ல (Concept) ஸ்ட்ராங்கா இருங்க.
ஏப்ரல் 23 ரிஜிஸ்ட்ரேஷன் ஆரம்பிக்குதுன்னா, அதுக்கு முன்னாடி போர்டு எக்ஸாம், ஜேஇஇ மெயின்ஸ் எல்லாத்தையும் முடிச்சிட்டு ரிலாக்ஸ் ஆகிடாதீங்க. அந்த கேப்ல தான் உங்க வெற்றியே இருக்கு. மெயின்ஸ் முடிச்ச கையோடு அட்வான்ஸ்டுக்கான பயிற்சியைத் தீவிரப்படுத்துங்க. ஆல் தி பெஸ்ட்!
