video : ஜப்பானிய மொழி தமிழில் இருந்து உருவானதா?

Published On:

| By christopher

japanese has tamil origins - is it true or not?

ஜப்பானிய மொழி தமிழில் இருந்து உருவானதாக ஆர்எஸ்எஸ் மூத்த உறுப்பினரும், எழுத்தாளருமான ரவிக்குமார் ஐயர் தெரிவித்துள்ளது விவாதத்தை எழுப்பியுள்ளது. japanese has tamil origins – is it true or not?

உலகம் முழுவதும் இன்று 7,000க்கும் அதிகமான தனித்துவமான மொழிகள் பேசப்படுவதாக கருதப்படுகிறது.

ADVERTISEMENT

எனினும் மொழிகள் சரியாக ஆவணப்படுத்தப்படுவதாலும், மற்ற மொழிகளின் ஆதிக்கத்தாலும் இந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

அவற்றில் செம்மொழியான தமிழ் மொழியில் இருந்து தான் தெலுங்கு, கன்னடம், துளு மற்றும் மலையாளம் போன்றவை உருவானதாக மொழியியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் மூத்த உறுப்பினரும், எழுத்தாளருமான ரவிக்குமார் கடந்த ஜனவரி மாதம் ’ரீபூட்டிங் தி பிரெய்ன்’ என்ற யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டியளித்திருந்தார்.

அப்போது அவர் தமிழ் மொழியில் இருந்து தான் ஜப்பானிய மொழி உருவானதாக பேசியிருந்தார். அதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

ADVERTISEMENT

அதில் அவர், “ஜப்பானிய மொழியானது சீனா எழுத்துகளை கொண்டது. அவர்களுக்கு இரண்டு மொழி வடிவங்கள் உள்ளது. ஒன்று ஹிரகனா மற்றொன்று காஞ்சி.

அவர்கள் மூன்றாவது மொழி வடிவத்தையும் பயன்படுத்துகின்றனர். அதை ஒரு தமிழர் தான் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு உருவாக்கியுள்ளார். 9ஆம் நூற்றாண்டு என சொல்கிறார்கள். அதற்கு பெயர் கட்டகனா. அது தமிழில் இருந்து தான் உருவாகியுள்ளது. japanese has tamil origins – is it true or not?

நான் ஒருமுறை மலேசியாவில் இருந்து தாய்லாந்திற்கு ரயில் மூலம் பயணம் செய்து கொண்டிருந்தேன். எனக்கு அருகில் ஒரு ஜப்பானியர் அமர்ந்திருந்தார்.

அவரிடம் எனது பெயரை ஒரு நோட்புக்கில், தமிழ், பஞ்சாபி, குஜராத்தி என எனக்கு தெரிந்த மொழிகளில் எழுதிக் காட்டினேன்.

என் பெயரை தமிழில் எழுத முடியுமா என்று அவரிடம் கேட்டேன். அவரும் என் பெயரை ஜப்பான் மொழியில் எழுதி காட்டினார். அதை இந்திய மொழிகளைப் போலவே இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கமாக படிக்க வேண்டும் என்றார்.

அவரிடம் எழுதியதை படித்துக்காட்டுமாறு கேட்டேன். அதற்கு அவர் ர, வ, வி, க, கு… என வாசித்து காட்டினார்.

ஆச்சரியப்பட்டு என்ன தமிழர்களை போலவே வாசிக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், எங்களுடைய மொழி தமிழில் இருந்து உருவானது தான் என்றார். இது உண்மையில் எத்தனை பேருக்கு தெரியும்” என்று பேசியிருந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Japanese was based on TAMIL!? #indianhistory

ஆதாரம் உள்ளதா? japanese has tamil origins – is it true or not?

உண்மையில் கட்டகனா தமிழில் இருந்து உருவானதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் ஹிரகனா மற்றும் காஞ்சி ஆகியவற்றின் எளிமைப்படுத்தப்பட்ட மொழி வடிவமாக கட்டகனா பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக வெளிநாட்டினர், விலங்குகள் மற்றும் தாவரங்களின் பெயர்களை எழுதுவதற்கும், வெளிநாட்டு கடன் சொற்களை எழுதுவதற்கும் கட்டகனா பயன்படுத்தப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உதாரணத்திற்கு கம்யூட்டர் (コンピューター), “பீட்சா” (ピザ) போன்ற வெளிநாட்டு வார்த்தைகளை எழுத கட்டகனா மொழி வடிவத்தை ஜப்பானியர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. ஜப்பானிய மொழி தனிமைப்படுத்தப்பட்ட மொழியாக, வேறு எந்த அறியப்பட்ட மொழிக் குடும்பத்துடனும் திட்டவட்டமாக இணைக்கப்படாத மொழியாக கருதப்படுகிறது. எனினும் சில எழுத்துக்களிடையே ஒற்றுமை இருப்பதாக மொழியியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். japanese has tamil origins – is it true or not?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share