‘விஜயண்ணா உங்களுக்கு என்னைப் பழி வாங்கணும்னா…’ ஜல்லிக்கட்டு ஜூலி விளாசல் புது வீடியோ

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

விஜயண்ணா, உங்களுக்கு என்னை பழி வாங்க வேண்டும் என்றால் நான் என் வீட்டில் இருப்பேன். இல்லை என்றால் என் ஆபிஸில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்கள். ஆனால் அவர்களை விட்டு விடுங்கள் என ஜல்லிக்கட்டு ஜூலி கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய், வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது ஜல்லிக்கட்டு காளையை சிறுவன் அடக்கியது குறித்து ஒரு குட்டிக் கதை கூறினார். இதற்கு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று பிரபலமடைந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜூலி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

ADVERTISEMENT

முதலில் வெளியிட்ட வீடியோவில் ஜூலி, “அண்ணா உங்கள் கட்சியில் இருப்பதில் பாதி பேர் மைனர் பசங்க… அவர்கள் நாங்களும் புல்லுக்கட்டை காட்டி ஜல்லிக்கட்டு காளையை அடக்க போகிறோம் என்று நினைக்க போய் ஒன்று கிடக்க ஒன்று ஆகிவிட்டால் என்ன செய்வது… 50 என்பது 50 ஆகவே இருக்கட்டும், 500 ஆக்கி விடாதீர்கள்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு தவெக கட்சியைச் சேர்ந்த பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து தற்போது ஜூலி மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு, விஜய் கடந்த கால நிகழ்வுகளில் பேசிய பாணியிலேயே அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார். அந்த வீடியோவில், “விஜயண்ணா, உங்க வேலூர் பரப்புரை பார்த்து அதில் எதுவும் இல்லை என்ற ஆதங்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டேன். உங்களுடைய ரசிகர்கள் ஆமாம், அவர்கள் ரசிகர்கள் மட்டும்தான். ஏனென்றால் இன்னும் அரசியல் வயப்படவில்லையே. அவர்கள் அனைத்து சோஷியல் மீடியா சைட்களிலும் என்னை வந்து கடிச்சு வச்சிட்டு இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

இந்த மைனர் பசங்களிடம் இருப்பது முக்காவாசி பேக் ப்ரொஃபைல் மட்டும்தான். அதை வத்துதான் என்ன மிரட்டி கொண்டு இருக்கிறார்கள். அதற்கெல்லாம் பயந்து நான் அந்த வீடியோவை டெலிட் பண்ணவும் மாட்டேன். என் கருத்துக்களில் இருந்து பின் வாங்கவும் மாட்டேன். என்னை மிரட்டினால் பரவாயில்லை. ஆனால் என்னை சார்ந்தவங்களையும் மிரட்டுவதால் இதை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.

விஜயண்ணா, உங்களுக்கு என்னை பழி வாங்க வேண்டும் என்றால் நான் என் வீட்டில் இருப்பேன். இல்லை என்றால் என் ஆபிஸில் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணுங்கள். ஆனால் அவர்களை விட்டு விடுங்கள்.

ADVERTISEMENT

ஓ நீங்கள் பனையூரை விட்டு வெளியே வர மாட்டீங்களா? நான் இன்னும் உயிரோடுதான் இருக்கிறேன். நான் வேண்டுமானால் பனையூர் வருகிறேன்.

என்னை திட்டினால் என்னை திட்டுவது மாதிரிதான். மக்களைத் திட்டுன மாதிரி எல்லாம் யாரையும் உள்ள இழுத்து போடமாட்டேன்.

ஒரு பெண்ணிற்கு முக்கியமாக சோஷியல் மீடியாவில் எவ்வளவு மரியாதையும், எவ்வளவு மதிப்பும் எவ்வளவு பாதுகாப்பும் உங்கள் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது என்பதை அந்த வீடியோ கீழ் இருக்கும் கமெண்ட் செக்ஷனில் டைம் இருந்தால் படித்து பாருங்கள். நன்றி அண்ணா!” என தெரிவித்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share