திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் -2, மமக -2 தொகுதிகளில் போட்டி!

Published On:

| By Kavi

திமுக கூட்டணியில் மமக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா இன்றிரவு (பிப்ரவரி 28) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். 

ADVERTISEMENT

அதில்,  “வரும் தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த 2 தொகுதிகளில் மட்டுமல்ல திமுக கூட்டணியின் வெற்றிக்கு 234 தொகுதிகளிலும் மமக தொண்டர்கள் அரும்பாடுபடுவார்கள். இன்று தொகுதிகளின் எண்ணிக்கை மட்டும் தான் முடிவுசெய்யப்பட்டது. அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் எந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது முடிவெடுக்கப்படும் ” என்று தெரிவித்தார். 

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதுகுறித்து  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  “11 கட்சிகள் கூட்டணியில் இருப்பதால்  எல்லோருக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் 2 தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  மூன்று தொகுதிகள் கேட்ட நிலையில் 2 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் 1 தொகுதி ஒதுக்குமாறு கேட்டுள்ளோம். எந்த தொகுதிகள் என அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும். நாங்கள் அகில இந்திய கட்சி என்பதால் ஏணி சின்னத்தில் போட்டியிடுவோம்” என்றார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share