இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவை அறிமுகப்படுத்தும் நோக்கில் ‘யுவிகா 2026’ – YUVIKA 2026 (யூவா விஞ்ஞானி கார்யக்ரம்) திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் 2 வார ரெசிடென்ஷியல் டிரெயினிங் ப்ரோக்ராம் (Residential Training Program) ஆக நடைபெறுகிறது.
இந்த திட்டம் மூலம் மாணவர்கள் ஸ்பேஸ் டெக்னாலஜி, ஸ்பேஸ் சயின்ஸ் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து நேரடி அனுபவத்துடன் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு பெறுகிறார்கள்.
யார் விண்ணப்பிக்கலாம்?
யுவிகா 2026 திட்டத்திற்கு:
- 2026 ஜனவரி 1 நிலவரப்படி 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்
- இந்தியாவில் உள்ள எந்த பள்ளியிலும் படித்து இருக்கலாம்
என்று தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தேதிகள்
யுவிகா 2026 திட்டத்திற்கான முக்கிய அட்டவணை:
- அறிவிப்பு : பிப்ரவரி 20, 2026
- விண்ணப்ப தொடக்கம் : பிப்ரவரி 27, 2026
- கடைசி தேதி : மார்ச் 31, 2026
- முதல் தேர்வு பட்டியல் : ஏப்ரல் 13, 2026
- இறுதி பட்டியல் : ஏப்ரல் 20, 2026
- பயிற்சி நடைபெறும் காலம் : மே 11 – மே 22, 2026
தேர்வு செய்யப்படும் முறை
இந்த திட்டத்திற்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவது மெரிட் அடிப்படையில் நடைபெறும்:
- 8ஆம் வகுப்பு மதிப்பெண்கள் – 50% வெயிட்டேஜ்
- ஆன்லைன் க்விஸ் – 10%
- சயின்ஸ் ஃபேர், எக்ஸ்ட்ரா கரிகுலர் செயல்பாடுகள் – 2–10%
- ஒலிம்பியாட், ஸ்போர்ட்ஸ், என்.சி.சி போன்றவை – கூடுதல் மதிப்பெண்
- கிராமப்புற பள்ளி மாணவர்கள் – 15% கூடுதல் வெயிட்டேஜ்
பயிற்சி எங்கு நடைபெறும்?
இந்த திட்டம் இந்தியாவின் முக்கிய இஸ்ரோ மையங்களில் நடைபெறும்:
- விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர்
- சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டர்
- யு.ஆர். ராவ் சாட்டிலைட் சென்டர்
உள்ளிட்ட 9 மையங்களில் பயிற்சி வழங்கப்படும்.
செலவு – முழுக்க இலவசம்
இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு:
- பாடப்பொருட்கள்
- தங்கும் வசதி
- உணவு
அனைத்தும் இஸ்ரோ மூலம் இலவசமாக வழங்கப்படும்.
மேலும், பயணச் செலவும் ரெயில் (II AC) அல்லது பஸ் கட்டணம் வரை திருப்பிச் செலுத்தப்படும்.
இந்த திட்டத்தின் முக்கியத்துவம்
யுவிகா திட்டத்தின் நோக்கம்:
- மாணவர்களுக்கு ஆரம்பத்திலேயே விண்வெளி அறிவியல் மீது ஆர்வம் உருவாக்குதல்
- எதிர்காலத்தில் STEM துறைகளில் (சயின்ஸ், டெக்னாலஜி, இன்ஜினியரிங், மேதமாட்டிக்ஸ்) மாணவர்களை உருவாக்குதல்
என்பதாகும்.
மாணவர்களுக்கு என்ன வாய்ப்பு?
இந்த திட்டத்தில் கலந்து கொள்வதன் மூலம்:
- இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சந்திக்கும் வாய்ப்பு
- ரியல் ஸ்பேஸ் லேப் அனுபவம்
- எதிர்கால கரியர் திசை தெளிவு
கிடைக்கும் என கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில், இஸ்ரோ யுவிகா 2026 திட்டம், விண்வெளி விஞ்ஞானியாக கனவு காணும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
