ஈரானின் 7 முக்கிய தலைவர்கள் பலி.. இஸ்ரேல் அறிவிப்பு

Published On:

| By Mathi

ஈரானின் அதி உயர் தலைவர் கமெனியின் ஆலோசகர் உட்பட 7 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல்- அமெரிக்கா இணைந்து உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது.

ADVERTISEMENT

இந்த போர்ச் சூழலால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஈரானின் அதி உயர் தலைவர் கமெனியை கொன்றுவிட்டதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் ஈரான் இதனை மறுத்துள்ளது.

இந்த நிலையில் கமெனியின் ஆலோசகர், ஈரான் புரட்சி படை தளபதி உட்பட 7 பேரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share