VIDEO : ஒரே அணியில் பாகிஸ்தான் வீரருடன் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர் – புதிய சர்ச்சை!

Published On:

| By christopher

ishan kishan played with pakistan abbas in same team

இந்தியா – பாகிஸ்தான் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இது அரசியலைத் தாண்டி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக கிரிக்கெட்டிலும் எதிரொலித்து வருகிறது. ishan kishan played with pakistan abbas in same team

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு போட்டிகள் நடந்து பலவருடங்களாகி விட்ட நிலையில், ஐசிசி தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதி கொள்கின்றன.

ADVERTISEMENT

இதற்கிடையே கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பஹல்காம் தாக்குதல் இரு நாட்டு உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் சமூகவலைதள பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணியைச் சேர்ந்த வீரர்கள் இரண்டு பேர் ஒரே அணியில் விளையாடியது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இங்கிலாந்தில் புகழ்பெற்ற கவுண்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ADVERTISEMENT

இதில் இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் மற்றும் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த பவுலர் முகமது அப்பாஸ் இருவரும் தான் நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக விளையாடி வருகின்றனர்.

நாட்டிங்ஹாமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று (ஜூன் 23) நாட்டிங்ஹாம்ஷையர் மற்றும் யார்க்ஷயர் இடையிலான போட்டி நடைபெற்றது.

அப்போது யார்க்ஷயர் தொடக்க வீரர் ஆடம் லித்தை கோல்டன் டக் அவுட்டாக்கியதும் அதை இருவரும் கட்டிபிடித்து இணைந்து கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது சர்ச்சையை ஏற்படுத்தினாலும், கவுண்டி தொடரில் ஒரே அணியில் இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள் இருப்பது வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக 5 முறை மட்டுமே இது போன்று நடந்துள்ளது. அதன் விவரம் :

1970பிஷன் சிங் பேடி

முஷ்டாக் முகமது மற்றும் சர்ஃப்ராஸ் நவாஸ்
நார்தாம்ப்டன்ஷயர் அணி
2004ஜாகீர் கான்
அசார் மஹ்மூத்
சர்ரே அணி
2005 ஹர்பஜன் சிங்

அசார் மஹ்மூத்
முகமது அக்ரம்
சர்ரே அணி
2006 அனில் கும்ப்ளே

அசார் மஹ்மூத்
முகமது அக்ரம்
சர்ரே அணி
2022சேதேஷ்வர் புஜாரா

முகமது ரிஸ்வான்
சசெக்ஸ் அணி
2025இஷான் கிஷன்

முகமது அப்பாஸ்
நார்தாம்ப்டன்ஷயர் அணி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share