வைஃபை ஆன் செய்ததும், “என் வழி தனிவழி”ன்னு போறது சிலருக்கு நல்லதா இருக்கும் போல என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
யாருப்பா ‘தனி வழி’ டிராக்கில் போறது?
பொதுவாக அரசியல்ல எல்லாரும் அப்படிதானே யோசிப்பாங்கன்னு சொல்றேன்.. இப்ப அதிமுக- பாஜக- தவெக பாலோ அப் சொல்றேன் கேளுய்யா..
சங்கீதா விவகாரத்துக்கு பின்னால திமுகதான் இருக்குன்னு செம்ம கோபத்துல விஜய் இருக்கிறாரு.. இப்படி ஸ்டாலின் மேல கோபத்துல இருக்கிற விஜய்யை எப்படியாவது கூட்டணிக்குள்ள கொண்டு வர அமித்ஷா, பவன் கல்யாணை இறக்கியிருக்கிறாருன்னு நாம டிஜிட்டல் திண்ணையில சொன்னோம்.. பவன் கல்யாணும் விஜய்கிட்ட, ‘ரெண்டரை வருஷம் நீங்க சிஎம்.. எடப்பாடி ரெண்டரை வருஷம் சிம்”னு டீல் பேசியிருந்தாருன்னு டிஜிட்டல் திண்ணையில பதிவு செஞ்சிருந்தோம் இல்லையா?
விஜய் இந்த ஆஃபரை சீரியசா டிஸ்கஷனும் செஞ்சிருந்தாரு..
இதை பத்தி விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “வேட்பாளர்களை முடிவு செய்யுறதுல்ல விஜய் தீவிரமா இருக்கிறாரு.. 234 தொகுதிகளுக்குமே வேட்பாளர்கள் கிடைக்கிறது ரொம்ப சிரமமா பீல் பண்றாரு.. சீட் கேட்டு பணம் கட்டியிருக்கிறவங்க பலரும் எலக்ஷன்ல செலவு செய்யற அளவுக்கு ‘பலமா’கவும் இல்லையேன்னும் யோசிச்சுகிட்டிருக்கிறாரு விஜய்.
விஜய் அட்வைசர் ஜான் ஆரோக்கியசாமியோ, ”நாம தனிச்சு நின்னாலே 35% ஓட்டு வாங்கிடலாம்.. அதுவும் கடைசி நேரத்துல விஜய் பிரசாரத்துக்கு போனா 40%-க்கு மேல வாங்கி நாம ஜெயிச்சுட முடியும்”னு சொல்றாரு..
ஆனா ஆதவ் அர்ஜூனா டல்லாதான் இருக்கிறார்.. அவரோட டீம்தான் தொடர்ச்சியா சர்வே எடுத்துகிட்டே இருக்கு.. இந்த டீமோட முந்தைய சர்வேக்கள் தந்த மகிழ்ச்சி இப்ப வர்ற ரிப்போர்ட்ஸ்ல இல்லைன்னு சொல்லிகிட்டு இருக்கிறாரு..
இந்த நிலையிலதான் பவன் கல்யாண், ”ரெண்டரை வருஷம் சிஎம்” ஆஃபரை விஜய்கிட்ட சொல்லி இருந்தாரு..
அதோட 5 பேர் கொண்ட பவன் கல்யாண் டீம் ஒன்னு சென்னைக்கு வந்துச்சு.. சென்னையில ஐடிசி ஹோட்டல்ல தங்கி இருந்த இந்த டீம் விஜய்யை ஒன் டூ ஒன் சந்திச்சும் பேசுனாங்க..
இந்தப் பேச்சுவார்த்தை முடிவுல, ”ரெண்டரை வருஷம் சிஎம்” ஆஃபருக்கு விஜய் ஓகேன்னு சொல்லிட்டாரு..
விஜய் கணக்கு என்னான்னா, 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களுக்கே ரொம்ப சிரமப்படுறோம்.. இப்ப நமக்கு டைரக்ட்டா ”சிஎம்” போஸ்ட் ஆஃபரே வருது.. அப்படி ”சிஎம்” போஸ்ட் கிடைக்கும் போது 234 தொகுதிகளிலுமே கட்சியை ஸ்டிராங் பண்ணி நமக்கான ஃபேஸை வலிமையாக்கிடலாம்னு நினைச்சுட்டு சரி ஓகேன்னு சொல்லியிருக்காரு” என்றனர்.
ஆமாய்யா… எடப்பாடியோட முடிவுதான் என்னவாம்?
அமித்ஷாவே எடப்பாடிகிட்ட நேரடியாக, ‘ரெண்டரை வருஷம் சிஎம்” பத்தி பேசியிருந்தாரு இல்லையா.. எடப்பாடி, குடும்பத்துல இருக்கிறவங்ககிட்ட சீரியசா பேசியிருக்காரு..
இதைப்பத்தி எடப்பாடி குடும்பத்துல இருக்கிறவங்ககிட்ட பேசுனப்ப, “அமித்ஷா சொன்னதை எடப்பாடி சொன்னாரு.. அப்ப, “நமக்கு மெஜாரிட்டி கிடைச்சுட கூடாதுன்னு பாஜக நினைக்குது.. நாம மெஜாரிட்டி இல்லா பாஜக தயவுல ஆட்சி நடத்தனும்னு எதிர்பார்க்கிறாங்க.. அது நமக்கு சரியா வராது.. குறைஞ்சது 160 சீட்டுல அதிமுக வேட்பாளர்கள் மட்டும் நிக்கனும்.. அதுதான் நம்ம எதிர்காலத்துக்கு சரியா இருக்கும்”னு சொன்னாரு.. நாங்களும் சில சாதக பாதகங்களை சொன்னோம்..
அதுக்குப் பிறகு அமித்ஷாகிட்ட பேசுன எடப்பாடி, “ரெண்டரை வருஷம் சிஎம்” அப்படிங்கிறது பத்தி கட்சி காரங்ககிட்ட பேசிப் பார்த்தேன்.. தொண்டர்களும், சீனியர்களும் ரொம்பவே கடுமையா எதிர்க்கிறாங்க.. அதனால ரெண்டரை வருஷம் சிஎம்-ங்கிற மூவ் சரியா வராது”ன்னு சொல்லிட்டாரு..” என்றனர்
விஜய் Yes சொன்னாலும் எடப்பாடி No சொன்னதால, எப்படியாவது ஜெயிக்கனுமே..வேற என்ன மூவ் செய்யுறதுன்னு ரொம்பவே திணறிகிட்டு இருக்கிறாராம் அமித்ஷா..
இன்னொரு பக்கம், அமித்ஷாகிட்ட எடப்பாடி இப்படி சொன்னதுக்கு பிறகுதான், பாஜகவுல நயினார் நாகேந்திரன், விஜய் கூட கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கலைன்னு சொன்னாரு.. அதோட விஜய்யை கூட்டணிக்கு அழைப்பு விடுத்து அறிக்கை கொடுத்த செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் கட்சிப் பதவியையும் பறிச்சுட்டாரு நயினார்.. அண்ணாமலையோ, “டீயும் காபியும் எப்படி ஒன்னா இருக்க முடியும்? விஜய்க்கும் எங்க சித்தாந்தத்துக்கும் வித்தியாசம் இருக்கு”ன்னு சொன்னாரு.. தவெகவுல நிர்மல்குமாரும், பாஜகவுடன் பேச்சுவார்த்தை இல்லைன்னு சொல்லி இருந்தாரு..
விஜய்யை வெச்சு அமித்ஷா இப்படி மூவ் செஞ்சுகிட்டு இருந்தாலும் எடப்பாடியோ, வேட்பாளர் தேர்வுல ரொம்பவே கவனமா ‘தனக்கான’ டீமை உருவாக்குறதல வழக்கத்தை விட சீரியசா இருக்கிறதால அதிமுகவுல திரும்புனபக்கம் எல்லாம் கொந்தளிப்பா இருக்காம்..அதைப் பத்தி நாளைக்கு விலாவாரியா சொல்றேன்யா.. என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
