விஜய் கெய்னரா? லூசரா?:  ஜெயக்குமார் பேட்டி!

Published On:

| By Kavi

விஜய் கூட்டணிக்கு வந்தால் அவர் கெய்னர் இல்லையென்றால் லூசர் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT

இன்றைய சூழலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் என்டிஏ-வுடன் கூட்டணி வைக்குமா வைக்காதா என்பதுதான் அரசியலில் பேசுபொருளாக உள்ளது.

தமிழக வெற்றிக்கழக இணை பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார், கூட்டணி தொடர்பாக வரும் செய்திகள் எல்லாம் வதந்தி என்று கூறிவிட்டார்.

ADVERTISEMENT

அதுபோன்று மூத்த தலைவரான செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகம் தனித்து தான் போட்டியிடும் என்று பேட்டியளித்துள்ளார்.

இந்த சூழலில் இன்று (மார்ச் 16) சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கு அவர்,  ‘ எங்கள் பொதுச் செயலாளர் தெளிவுபடுத்தி விட்டார். அவர்களுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இல்லை. ஆனால் ஒன்று மட்டும் விஜய் தெரிந்து கொள்ள வேண்டும். அதிமுக தலைமையை ஏற்று விஜய் கூட்டணிக்கு வந்தால் அவர் கெய்னர். இல்லையென்றால் லூசர். கெய்னரா லூசரா என்று அவர்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தற்போது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வருகின்றன

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share