தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? – மாணிக்கம் தாகூர் விளக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழ்நாட்டிற்கு கூட்டணி ஆட்சி என்பது ஒத்து வராது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில், “கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்” என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக தனிமையில் ஆட்சி அமைக்கும் என்று கருதப்படும் சூழலில், காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள ஒரு தரப்பினர் ஆட்சியில் பங்கு கோரிக்கையை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.இந்நிலையில்,

ADVERTISEMENT

இன்று இந்தியா டுடே கருத்தரங்கில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “திமுக – காங்கிரஸ் இணைந்து தான் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும். ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு பொருந்தாத கோரிக்கை. அது எங்களை விட காங்கிரஸ் கட்சியினருக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் ஒன்றாக இருப்பதை பிடிக்காதவர்கள் செய்யும் திட்டமிட்ட சதி தான் இந்தக் கோஷம்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு எதிர்வினையாக, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பதிவில், “மக்கள் முடிவு செய்வார்கள். கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? என்பதை
2006-ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தவறு.” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share