தமிழக அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள நடிகர் விஜய் இன்று (ஜூன் 22) தனது 51வது பிறந்தாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி தமிழகம் முழுவதும் அவரது கட்சியினர் மதிய உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். is jananayagan will be the last film of vijay?
இதற்கிடையே அவரது கடைசி படமாக கருதப்படும் ஜனநாயகன் படத்தின் டீசர் அவரது பிறந்தநாளையொட்டி நள்ளிரவு 12 மணிக்கு வெளியானது.
அதில் போலீஸ் உடையில் விஜய் மாஸாக நடந்து வரும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அது இதுவரை 15 மில்லியன் பார்வைகளைப் பெற்று யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.
இந்த நிலையில் ஜனநாயகன் படத்தில் நடித்த நடிகை மமிதா பைஜூவின் சமீபத்திய பேச்சு விஜய் ரசிகர்களின் நெஞ்சைக் குளிரச் செய்துள்ளது.

சமீபத்தில் கேரளாவில் நடந்த ஒரு நிகழ்வில், பங்கேற்ற மமிதாவிடம், விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் நடித்த அனுபவம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “ஜனநாயகன் படப்பிடிப்பின் கடைசிநாளில், நான் விஜய் சாரிடம், “ஜனநாயகன் தான் உங்கள் கடைசி படமா? என்று நேரடியாகக் கேட்டேன். அதற்கு விஜய், ‘எனக்குத் தெரியவில்லை. எல்லாம் தேர்தல் முடிவுகளைப் பொறுத்தது’ என பதிலளித்ததாக மமிதா தெரிவித்தார்.
விஜயின் திரையுலக வாழ்க்கை ஜனநாயகன் படத்துடன் முடிவுக்கு வருவதாக அவரது ரசிகர்கள் தொடர்ந்து கவலைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மமிதாவின் பேச்சு இணையத்தில் வைரலான நிலையில் விஜய் ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது.
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு ஆகிய படங்களைத் தொடர்ந்து ஹெச். வினோத் விஜய்யின் ஜனநாயகன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பூஜாஹெக்டே, பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி, ஸ்ருதி ஹாசன், மமிதா பைஜு, மோனிஷா பிளெஸ்ஸி மற்றும் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் திருநாளையொட்டி வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.